206 கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம்-ராஜேந்திர பாலாஜி

சென்னை, பிப்ரவரி-19

தமிழகத்தில் உள்ள 206 கல்லூரிகளில் ஆவின் பாலகம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் கலை கல்லூரியில் ஆவின் பாலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திருப்பத்தூர் கலை கல்லூரி வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 200 கல்லூரிகளில் ஆவின் பலகம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்ததாகவும் ஆனால் தற்போது 206 கல்லூரிகளில் ஆவின் பாலகம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

விரைவில் எங்கு எங்கு கல்லூரி வளாகங்களில் பாலகம் அமைக்க முடியுமோ அந்த இடங்களில் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *