சாலைகளுக்கு பாதிப்பு இல்லாமல் பாதாள சாக்கடை திட்டம்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை, பிப்ரவரி-19

சாலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது, பட்டுக்கோட்டை நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சேகர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை இருப்பதின் காரணமாக கசடு கழிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அங்கு வெளியாகும் கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு வழங்கப்படும்.

பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை அதிகரிக்கும் பொழுது பாதாள சாக்கடை திட்டம் அமைப்பது குறித்து அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *