பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு தனி சட்டம்- விரைவில் நல்ல செய்தி வரும்-எடப்பாடி

சென்னை, பிப்ரவரி-19

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு தனி சட்டம் இயற்றுவது சரியான முறையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து தான் கொண்டு வர முடியும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும், ரத்து செய்தால் தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது சால சிறந்தது என்றும், புதிய திட்டங்கள் வராத வகையில் ஒரு சட்ட முன்வடிவையும் கொண்டுவரவேண்டும் என கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வரப்பெற்ற நிலையில், அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குரிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், இதில் பிரச்சனைகள் இருப்பதால், சரியான முறையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து தான் இதை கொண்டு வர முடியும் என்றும், விரைவில் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல செய்தி வரும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *