கருத்தடை செய்து கொள்ள ஆண்கள் முன்வரவேண்டும்-அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, பிப்ரவரி-19

ஆண்களும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்வர வேண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, குடும்ப கட்டுபாடு பெண்களுக்கு மட்டுமே உள்ளதாகவும் ஆண்களுக்கும் குடும்ப கட்டுபாடு சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் கேள்வி எழுப்பினார்

இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆண்டுக்கு 2 லட்சம் பெண்களுக்கு குடும்ப கட்டுபாடு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆண்களுக்கும் புதியதாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கத்தியின்றி ரத்தமின்றி இரண்டு மணி நேரத்தில் அந்த சிகிச்சை முடிவடைந்துவிடும்.

கடந்த ஆண்டு 80 பேருக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டும் 800 பேருக்கு குடும்ப கட்டுபடு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள விருப்பம் உள்ள ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, பாப்பிரெட்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை பிரிவு துவக்க ஆவன செய்யுமா? என கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே, அங்கு கருத்தடை அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. முதுநிலை படித்த மருத்துவர்கள் பணியில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும், மருத்துவர்கள் கணக்கெடுக்கப்பட்டு விரைவில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *