இதுவே நான் பேசியது -நடிகர் விவேக் விளக்கம்
செப்டம்பர்-25
விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். நடிகர் விவேக்-ம் பிகில் படத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவின் 1960-ல் வெளியான சிவாஜியின் இரும்புத்திரை திரைப்படத்தில் வரும் பாடலை குறிப்பிட்டு நடிகர் விவேக் பேசினார். இதற்கு சிவாஜி ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், 1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி “நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைகுறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க. என நடிகர் விவேக் விளக்கமளித்துள்ளார்.