ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!!

புல்வாமா, பிப்ரவரி-19

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அன்சாரி 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

புல்வாமா மாவட்டம், அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு சிறப்பு அதிரடிப்படை போலீஸார் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீஸார் தேடுதலில் ஈடுபடுவதை பார்த்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு போலீஸார் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இருதரப்பிலும் நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. முடிவில் இன்று அதிகாலையில் மூன்று தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.

அந்த தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டதில் அவர்கள், அன்சாரி காஸ்வா உல் இந்த் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் ஜஹாங்கிர் ரபிக் வானி, ராஜா உமர் மெக்பூல் பாட், உஜையர் அகமது பாட் என அடையாளம் காணப்பட்டனர்.

இந்த 3 தீவிரவாதிகளிடம் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *