சிஏஏ: அரசியல் நோக்கத்தால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்-அமைச்சர் ஜெய்சங்கர்

பிரஸ்ஸல்ஸ், பிப்ரவரி-18

சிஏஏ குறித்து விமர்சிப்பவர்கள் அரசியல் நோக்கத்தால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஜெர்மனியின் மூனிச் நகரில் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசி, வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ ஆகியோரை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார்.

இதனை தொடர்ந்து, பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெய்சங்கர், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து குறித்து விளக்கினார்.

அதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றம் மற்றும் அகதிகள் மறுகுடியேற்ற கொள்கைகளுடன் ஒப்பிட்டு பேசினார். மேலும் இந்தியாவின் அண்டை நாடுகள் பலவும் இஸ்லாமிய சமய சார்புடைய நாடுகள் என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர், அந்த நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு வரும் சிறுபான்மையின மக்களுக்கு இந்தியா ஆதரவு அளித்து வரவேற்கிறது.

மேலும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விமர்சிப்பவர்கள் அரசியல் நோக்கத்தால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *