5-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா!!!

டெல்லி, பிப்ரவரி-18

கடந்த 2019-ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பிரான்சை பின்னுக்கு தள்ளிய இந்தியா, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை மையமாக கொண்ட வேர்ல்டு பாப்புலேஷன் ரிவ்யூ என்ற அமைப்பு, பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.94 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது.

இதன் மூலம் 2.83 டிரில்லியன் டாலருடன் இருக்கும் இங்கிலாந்து மற்றும் 2.71 டிரில்லியன் டாலருடன் இருக்கும் பிரான்ஸ் தரவரிசையில் பின்தங்கியுள்ளன.

தன்னிச்சையான பொருளாதார கொள்கையில் இருந்து மாறுபட்டு, திறந்த சந்தை பொருளாதாரத்திற்கு இந்தியா மாறி வருகிறது. வாங்கும் திறன் சமநிலை (பிபிபி) விதிமுறைகளில், இந்தியாவின் ஜிடிபி 10.51 டிரில்லியன் டாலராக உள்ளது. இது ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட அதிகமாகும்.

இருப்பினும், இந்தியாவின் வருடாந்திர ஜிடிபி வளர்ச்சியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக (7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக) சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *