என்.பி.ஆர்.க்கு தடையில்லை, என்.ஆர்.சி. யை அனுமதிக்க முடியாது-உத்தவ் தாக்கரே

மும்பை, பிப்ரவரி-18

மகாராஷ்டிராவில் என்.பி.ஆர்., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்துவதற்கு தடையில்லை என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:
என்பிஆர் படிவங்கள் குறித்து தான் நேரடியாக ஆய்வு செய்வேன். என்.பி.ஆர், கணக்கெடுப்பால் யாருக்கும் பாதிப்பு இருக்கக்கூடாது. அதேநேரத்தில் என்ஆர்சி அமல்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. சிஏஏ, என்ஆர்சி என்பது வேறு, என்பிஆர் என்பது வேறு. சிஏஏ அமல்படுத்தினால் யாரும் கவலைப்பட தேவையில்லை.

என்ஆர்சி அமல்படுத்தினால் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் ஆதிவாசிகளும் பாதிக்கப்படுவார்கள். தற்போது வரை என்.ஆர்.சி., குறித்து மத்திய அரசு விவாதிக்கவில்லை. என்பிஆர் என்பது கணக்கெடுப்பு மட்டுமே. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த கணக்கெடுப்பால் யாரும் பாதிக்கப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *