ஹே ராம் படத்தில் பேசியது தற்போது உண்மையாகி வருகிறது-கமல்

சென்னை, பிப்ரவரி-18

ஹேராம் படம் வெளியாகி 20 வருடங்கள் ஆன நிலையில், அந்த படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.

2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹேராம். இந்த படத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி என பலர் நடித்திருந்தனர். ஹேராம் படத்தினை நடிகர் கமல்ஹாசன் தயாரித்திருந்தார். இந்து இஸ்லாமியர்களின் மனநிலை, மகாத்மா காந்தியின் கொலை என பல அரசியல் விஷயங்களை இந்த படம் பேசியது.

இந்த நிலையில், ஹேராம் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார். அதில், ஹே ராம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. படத்தை எடுத்ததில் பெருமை கொள்கிறோம்.  படத்தில் பேசப்பட்ட அசம்பாவிதங்களும், எச்சரிக்கைகளும் தற்போது உண்மையாகி வருவது வருத்தமளிக்கிறது. நாட்டின் நல்லிணக்கத்திற்காக இந்த சவால்களை கடந்து முன்னேறவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *