மகாத்மா காந்தி ஒரு தீவிர ஹிந்து-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்

டெல்லி, பிப்ரவரி-18

மகாத்மா காந்தி ஒரு ஆச்சாரமான தீவிர ஹிந்து என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் தேசிய கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் ராஜ்புட் எழுதிய, ‘மகாத்மா காந்தியின் பொருத்தம்’ என்னும் புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் வெளியீட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: காந்தி, இந்தியாவை புரிந்துகொள்ள பயணம் மேற்கொண்டு, அபிலாஷைகளையும் துன்பங்களையும் கொண்ட ஒருவரானார். அதனால் தான் அவர் ஹிந்துவாக இருப்பதற்கு ஒருபோதும் வெட்கப்படவில்லை. தான் ஒரு தீவிர ஹிந்து என அவர் கூறினார். மற்ற மதங்களை மதிக்கவும் கற்று கொடுத்தார்.

காந்தி கனவு கண்ட இந்தியா இன்னும் உருவாக்கப்படவில்லை. தற்போதைய தலைமுறையினர் மீது அவர் முழு நம்பிக்கை வைத்திருந்தார். இப்போது இல்லையெனினும், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் அமைதியுடன் பணியாற்ற முடியும் என சொல்லும் காலம் வரும். சில நேரங்களில் காந்தியின் இயக்கம் தவறாக நடந்தது.

அதில் அவரது முறை தவறாக இருந்தாலும், நோக்கம் தவறாக இருக்காது என அறிந்திருந்தார். தவறுக்கு அவரே பொறுப்பேற்பார். ஆனால் இப்போதுள்ள இயக்கங்களில், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இருந்தால், அதற்கு பொறுப்பேற்க யாரும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *