இந்திய அணி முதல் டி-20 உலகக் கோப்பையை வென்ற தினம்

செப்டம்பர்-25

இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு நடந்த முதல் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையில் களம் புகுந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வென்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இறுதியாக பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக், அடித்த பந்தை இந்திய வீரர் ஸ்ரீ சாந்த் கேட்ச் பிடித்தார். அத்துடன் அந்த அணி ஆல்-அவுட் ஆனதால், பாகிஸ்தானின் உலக கோப்பை தகர்ந்த நிலையில், முதல் இருபது ஓவர் உலக கோப்பையை இந்தியா தன் வசமாக்கியது.

இந்நிலையில், 12 ஆண்டுக்கு முன் நடந்த பசுமையான சம்பவங்களை தற்போது நினைவுகூர்ந்துள்ள பிசிசிஐ, இந்தியா வென்ற தருணத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *