நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ந் தேதி தூக்கு : நீதி மன்றம் உத்தரவு

டெல்லி.பிப்ரவரி.17

நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் மார்ச் 3ந் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை தேதி குறிப்பிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று 3வது முறையாக தூக்கு தண்டைனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை பாட்டியாலா நீதிமன்றம்  அறிவித்துள்ளது.

கடந்த 2012 டிசம்பர் 16-ந்தேதி மருத்துவ மாணவியான நிர்பயா ஓடும் பேரூந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் ல் பாலியல்வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது.
ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதி ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் ஜெயிலுக்குள் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர் மேல்முறையீடு செய்த மனுவை 2018-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி நீதிபதிகள் தள்ளுபடி செய்திருந்தனர்.

நான்கு பேரையும் ஜனவரி 22-ம் தேதி தூக்கிலிடுவதற்கு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், குற்றவாளிகளில் ஒருவர் மேல்முறையீடு செய்ததால் ஜனவரி 22-ம் தேதி தூக்கு தண்டனை பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், பிப்ரவரி 1-ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதுவும், குற்றவாளிகளின் மேல்முறையீடு காரணமாக ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில், குற்றவாளிகளின் மேல்முறையீடு வாய்ப்புகள் நிறைவடைந்த நிலையில், மார்ச் 3-ம் தேதி தூக்கிலிடுவதற்கு டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *