3 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு : சாதனை மலர் வெளியீடு

சென்னை, பிப்.17

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சாதனை மலர் வெளியிடப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் தனபால்,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து  வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா அரசின் ‘‘முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்குச் சான்று” என்ற மூன்றாண்டு சாதனை மலர்கள், மாவட்டம் வாரியாக தொகுக்கப்பட்ட அரசின் மூன்றாண்டு சாதனை மலர்கள், ‘முதலமைச்சர் சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு, பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளின் தொகுப்பு ஆகியவை அடங்கிய  மூன்றாண்டு சாதனைகளின் குறும்படம் மற்றும் காலப் பேழை புத்தகம் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, மாவட்டம் வாரியாக தொகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை மலர்கள், முதலமைச்சர் ஆற்றிய உரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட முத்தான கருத்துரைகள், மூன்றாண்டு சாதனை குறும்படங்களின் குறுந்தகட்டினை முதலமைச்சர் வெளியிட, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக் கொண்டார். மேலும், காலப்பேழை புத்தகத்தினை தலைமைச் செயலாளர் க.சண்முகம் பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *