குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து, டி.என்.பி.எஸ்.சி.விளக்கம்

சென்னை. பிப்ரவரி.17

குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து, தமிழ்நாடு  அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்து உள்ளது.
இது குறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குரூப் – 4′ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ள, ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, டிசம்பர் 5 முதல், 18 வரை அவகாசம் வழங்கப்பட்டது. பதிவேற்றம் செய்தவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு தேதி, டி.என்.பி.எஸ்.சி.,இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளவர்கள், மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம். அதே நேரம், கூடுதலாக, 27 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் மட்டும், தங்கள் சான்றிதழ்களை, பிப்ரவரி 18க்குள், ‘இ – சேவை’ வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என  அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *