சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

 

சென்னை.பிப்ரவரி.17

நடிகர் சிவகார்த்திகேயனின்  பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் நடித்துவரும் புதிய படமான  டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

நயன்தாரா நடித்த கோலமாவு படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இவர் இரண்டாவதாக  இயக்கும் படம்  டாக்டர். சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தனது ட்விட்டர் பக்கத்தில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *