தென்காசியில் ஜுன் மாதத்திற்குள் கழிவு நீர் கசடு திட்டம் நிறைவேற்றம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

சென்னை.பிப்ரவரி.17

தென்காசி நகராட்சியில் ஜுன் மாதத்திற்குள் கழிவு நீர் கசடு திட்டம் நிறைவேற்றப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தென்காசி நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தென்காசி தொகுதி,தென்காசி நகராட்சியில் கழிவு நீர் கசடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

 அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தென்காசி தற்போது மாவட்ட தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். தென்காசியில் 2011 கணக்கெடுப்பின்படி 70,550 நபர்கள் வசித்து வந்தனர் ஆனால் தற்போது மக்கள் தொகை இருமடங்காக அதிகரித்துள்ளதால்  பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற அரசு ஆவண செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பாதாள சாக்கடைத் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது,ஆனால் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் கழிவு நீர் கசடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது.எனவே ஜுன் மாதம் தென்காசி நகராட்சியில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். மேலும் பாதாள சாக்கடைத் திட்டம்   கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *