வண்ணாரப்பேட்டையில் தடியடி ஏன் ? முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

சென்னை.பிப்ரவரி.17

சென்னை வண்ணாரப்பேட்டையில்  இயற்கையாக உயிரிழந்த ஒருவர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு இரவு நேரத்தில் போராட்டம் நடத்தப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் தெரிவித்துள்ளார்.

 வண்ணாரப்பேட்டையில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக் கிழமை முதல் போராட்டம் நடை பெற்று வருகிறது. போராட்டக் காரர்களை  கலைந்துபோகும்படி காவல்துறையினர் வலியுறுத்தியும்  அவர்கள் கலைந்துபோகாத நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.இதனால் அங்கு காவல்துறையினருக்கும்  –  போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையின்ர் அங்கு தடியடி நடத்தினர். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று வண்ணாரப் பேட்டை தடியடி தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் விளக்கம் அளித்து பேசினார்.

அப்போது, போரட்டம் உரிய அனுமதி இன்றி நடைபெற்றதாகவும்,பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இயற்கையாக உயிரிழந்த ஒருவர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டதன் காரணமாக இரவு போராட்டம் நடத்தப்பட்டது, போராட்டக்காரர்களை அழைத்து பேசியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள், வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *