நாடு முழுவதும் மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் : நிதிஷ்குமார்

டெல்லி.பிப்ரவரி.17

 நாடு முழுவதும் மதுவிலக்கு என்ற  என்ற மகாத்மா காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்  என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் Liquor-free India” (‘மதுபானம் இல்லா இந்தியா) மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நிதிஷ் குமார்,மதுபானங்களுக்கு தடை விதிப்பது அண்டை மாநிலங்களில் மட்டுமல்ல, நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும். அது தான் மகாத்மா காந்தியின் விருப்பம். அவர், மதுபானங்கள் உயிரை அழிக்கிறது என கூறியிருந்தார்.

கடந்த காலங்களில், சில சமயங்களில் நாட்டில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் அமல்படுத்த முடியவில்லை. பீகாரில் 2011 முதல் மதுவிலக்கு அமல்படுத்த திட்டமிட்டு, இறுதியாக 2016ல் செயல்படுத்தப்பட்டது. பீகாரில் மதுவிலக்கு உறுதியாக நீடிக்கும் என்று நிதிஷ்குமார் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *