முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது-ராஜ்நாத் சிங்

சென்னை, செப்டம்பர்-25

எதிரிகள் உள்ளே நுழைந்தால் தடுத்து தாக்குதல் நடத்துவதற்கு நமதுமுப்படைகளும் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கடலோர காவல்படையில் ‘வராஹா’ என்ற ரோந்து கப்பலை சேர்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது, இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள், கையெறி குண்டுகளை பாகிஸ்தான் வீசி விட்டு செல்வதாக பஞ்சாப் முதல்வர் எழுதிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, எல்லை தாண்டிய பயங்கரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் சரி. அதனை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க நமது ராணுவ வீரர்கள் தயாராக இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் மீண்டும் பயங்கரவாதிகள் முகாமிடத் தொடங்கியுள்ளனர். அதனை மூட இந்திய ராணுவம் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கவலைப்பட வேண்டாம். நமது படைகள் முழுமையாக தயாராக உள்ளன என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *