சிஏஏ குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி இல்லை: சபாநாயகர்

 சென்னை.பிப்ரவரி.17

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவதாதிக்க அனுமதி இல்லை என்று சட்டப்போரவைத் தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.இன்றைய கேள்வி நேரத்திற்கு பின்னர் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அது தொடர்பாக விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் பேரவைத் தலைவர் தனபால் சட்டப்போரவையின் விதியின் படி சிஏஏ குறித்து விவாதிக்க அனுமதி இல்லை என்று கூறினார். எனினும்  சென்னை  வண்ணாரப்பேட்டையில் சிஏஏ –வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் தடியடி குறித்து விவாதிக்க அனுமதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *