ஒரே ஆண்டில் 225 பள்ளிகளின் தரம் உயர்வு : பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை. பிப்ரவரி.17

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 225 பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2020-21 நிதிஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் தலைமையில் நடைற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தை பிப்ரவரி.17 முதல் 20-ம்தேதிவரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இன்று பேரவை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

இந்த விவாதத்தில் பங்கீட்டு தொகை தொடர்பாக கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த ரூ.1 லட்சமும், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ரூ.2 லட்சமும் பங்குத்தொகையாக வாங்கப்படுகிறது. மேலும் பொதுமக்களிடம் பங்கீட்டுத் தொகை வாங்கும் முறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரினார்.

இதற்கு பதில் அளித்த பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏசெங்கோட்டையன், இதுகுறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஒரே ஆண்டில் தமிழகத்தில் 225 பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது இந்த ஆட்சியில்தான் என்றும் தாக மேலும் மலைவாழ், கிராமப்புற பள்ளிகளை தரம் உயர்த்தும்போது பொதுமக்களிடம் பங்கீட்டுத்தொகை வழங்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *