ராகுல் காந்தியால் பதவி விலக முடிவு செய்த மன்மோகன் சிங்

டெல்லி.பிப்ரவரி.17

2013 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது செய்தியாளர் சந்திப்பில் அவசர சட்டத்தின் நகலை ராகுல்காந்தி கிழித்து எறிந்ததனால் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பதவி விலக எண்ணியதாக மாண்டேங்சிங் அலுவாலியா கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய திட்டக்குழுவின் துணை தலைவராக இருந்த அலுவாலியா எழுதியுள்ள”Backstage: The Story behind India’s High Growth Years” புத்தகத்தில் 2013 ம் ஆண்டு காங்., ஆட்சியின் போது, கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ.,க்களை தகுதிநீக்கம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால், எம்.பி., எம்எல்ஏ.,க்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தண்டனைக்கு தடை வந்தால், அவர்கள் சம்பளம் அல்லது வாக்களிக்கும் உரிமை இன்றி பதவியில் தொடர அனுமதி அளிக்க வகை செய்யும் விதமாக அப்போதைய அரசு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.


2013, செப்படம்பர்,27 அன்று அப்போதைய காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி செய்தியாளர் சந்தித்த  போது அவசர சட்ட நகலை கிறித்து எறிந்த நிகழ்வு பெரும் சர்ச்சையானது. இது நடைபெற்ற போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தார். நானும் அவருடன் சென்றிருந்தேன். நாங்கள் நியூயார்க்கில் இருந்த சமயத்தில் எனது சகோதரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சஞ்சீவ், பிரதமரை கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதை மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பி இருந்தார்.

அதை நான் மன்மோகன் சிங்கிடம் காட்டினேன், அதை அமைதியாக படித்த அவர், நான் பதவிவிலக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா என கேட்டார். இப்படி ஒரு பிரச்னையான சூழலில் நீங்கள் பதவி விலகுவது சரியாக இருக்காது என ஆலோசனை வழங்கினேன். இவ்வாறு அலுவாலியா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ராகுலால் மன்மோகன் சிங் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், பதவி விலகும் முடிவில் இருந்ததாகவும் அலுவாலியாக எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *