விஜயின் குட்டி கதை பாடலுக்கு 24 மணி நேரத்தில் 90 லட்சம் பார்வைகள், 10 லட்சம் லைக்குகள்
சென்னை, பிப்ரவரி-15
24 மணி நேரத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடலை 90 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்பட லர் நடிக்கிறார்கள்.
விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும், நீட் தேர்வு பாதிப்புகளை பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் ‘ஒரு குட்டி கதை’ காதலர் தினமான நேற்று வெளியானது.
விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனத் தொடங்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் 24 மணி நேரத்தில் 90 லட்சம் பார்வையாளர்களையும், 10 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.