சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

டெல்லி, பிப்ரவரி-15

சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியபட்டு உள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணத்தில் இருக்கும் வூகான் நகரில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் 1500 பேரின் உயிரை பலி வாங்கியுள்ளது. சீனா மட்டுமின்றி உலகின் 30 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இருப்பதால், அதை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 1631பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிர்கொல்லி வைரஸால் 67,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சீனாவில் இருந்து இந்தியா வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த 17 பேரும் தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டு இருப்பதாக சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *