சென்னை பள்ளிகளில் விரிவடையும் காலை உணவு திட்டம்!!!

சென்னை, பிப்ரவரி-15

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும், 5 ஆயிரம் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் பணியை, அட்சய பாத்திரம் அறக்கட்டளை, கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவக்கியது. மேலும் 12,000 மாநகராட்சி பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் அக்‍ஷய பாத்ரா அறக்கட்டளையின் சமையல் கூடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அக்‌ஷய பாத்ரா என்ற அமைப்பின் மூலம் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். மேலும், தனது விருப்ப நிதியில் இருந்து 5 கோடி ரூபாயும் அக்‌ஷய பாத்திர நிறுவனத்திற்கு ஆளுநர் வழங்கினார்.  

காலை உணவு திட்டம் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் பிற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தார்.

இந்த நிலையில், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 2-வது கட்டமாக 12 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான பணிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், சரோஜா, பாண்டியராஜன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சியின் 35 பள்ளிகளை சேர்ந்த 12,000 மாணவர்களுக்கு சத்தான காலை உணவினை வழங்க அக்‍ஷய பாத்ரா அமைப்பு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *