ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை…அஜித் தான்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர், பிப்ரவரி-15

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை என்றும்,  ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பட்ஜெட் வரி விதிப்பு இல்லாத பட்ஜெட். யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத முத்தான பட்ஜெட். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வின் கடைசி பட்ஜெட் இது என்று கூறி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வின் அடுத்த 5 ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இதுவாகும்.

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை. நடிகர் விஜய், ரஜினிக்கு நிகரான நடிகர் அஜித் தான். அஜித் ‘தல’, ரஜினி ‘மலை’.

விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.390 கோடியில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *