பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது
நியூயார்க், செப்டம்பர்-25
தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் சார்பில் குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடிக்கு உலகின் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் வழங்கினார்.

அதனை தொடர்ந்து பேசிய மோடி, இந்த விருது தனக்கானது இல்லை என்றும், 130 மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளில் இந்த விருது கிடைத்திருப்பது தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியமானதாக பார்ப்பதாக கூறினார்.