Life is Very short Nanba, always be happy…விஜய் சொன்ன குட்டி கதை!!!!

சென்னை, பிப்ரவரி-14

மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கதை எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகை மாளவிகா மேனன், சாந்தனு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய், கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் மேடையில், சொல்லும் ‘குட்டிக் கதை’யிற்காகவே அவரின் ரசிகர்கள் காத்திருப்பார்கள். அதனை போலவே இந்த ஒரு குட்டி கதை பாடலுக்கான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், குட்டி கதை பாடலின் Lyrical வீடியோ இன்று வெளியிடப்பட்டது. ஒரு குட்டி கதை என தொடங்கும் இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்தில் செல்ஃபி புள்ள பாடலை விஜய் பாடியுள்ளார். 2டி ஸ்கெட்ச் முறையில் குட்டி கதை பாடல் வெளியாகியுள்ளது. விஜய் படங்களில் இந்த முறையில் பாடல் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.

அருண்ராஜ் காமராஜ் எழுதியுள்ள இந்த பாடலில் Life is Very short Nanba, always be happy, நோ டென்ஷன் பேபி… positivity உன்ன lift பன்னும் பேபி… போன்ற வரிகள் விஜய் அமைந்துள்ளது. இடையில் தமிழ் கலந்து முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருக்கும் இந்த பாடலை தனக்கே உரிய பாணியில் பாடி நடிகர் விஜய் அசத்தியுள்ளார். பாடலில் விஜய் தோற்றத்தை அனிமேஷனில் இடம்பெறச் செய்திருப்பது ரசிக்கத்தக்க வகையில் உள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *