தமிழக பட்ஜெட் 2020: முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும்…ஓர் அலசல்

சென்னை, பிப்ரவரி-14

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபை கூடியதும் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020-2021-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 10-வது பட்ஜெட் இதுவாகும். 

தமிழக அரசின் வருவாய், நிலுவைக் கடன் மற்றும் பற்றாக்குறை:

2021-2022 நிதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக குறையும்

தமிழக அரசின் நிலுவைக் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்

தமிழக அரசின் வருவாய் ரூ.2.19 லட்சம் கோடியாக இருக்கும்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு

இதுதவிர சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு கடன் பெற திட்டம்

எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

  • சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு
  • மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு
  • கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு
  • தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு
  • போக்குவரத்து துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு
  • நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு
  • பேரிடம் மேலாண்மைக்கு ரூ.1360 கோடி ஒதுக்கீடு
  • தமிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு
  • சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.18,540 கோடி ஒதுக்கீடு
  • நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1403 கோடி ஒதுக்கீடு
  • வேளாண்துறைக்கு ரூ.11,894 கோடி ஒதுக்கீடு
  • நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடி ஒதுக்கீடு
  • ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஒதுக்கீடு
  • கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு
  • மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு ரூ.1230 கோடி ஒதுக்கீடு
  • நீர்ப்பாசனத்துறைக்கு 6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு
  • கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கப்படும்
  • சுற்றுலா மேம்பாடு திட்டத்திற்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு
  • மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி ஒதுக்கீடு
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு
  • ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு ரூ.4,109.53 கோடி ஒதுக்கீடு
  • பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் நலனுக்காக ரூ.1034.02 கோடி ஒதுக்கீடு

முக்கிய அறிவிப்புகள்:

  • சென்னை பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்
  • சென்னை – கன்னியாகுமரி இடையே பொருளாதார பெருவழிச்சாலை திட்டம்
  • 1,12,876 தனி வீடுகள், 65,290 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்
  • ரூ.504 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் 5 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை உலக வங்கியிடமிருந்து பெற்று செயல்படுத்தப்படும்
  • நகர்ப்புற ஏழை, எளியவர்களுக்கான நிலைக்கத்தக்க வீட்டுவசதி மற்றும் உறைவிடத் திட்டம் செயல்படுத்தப்படும்
  • அதிகாரிகள் – விவசாயிகளை இணைக்க உழவர் – அலுவலர் தொடர்பு எனும் பெயரில் புதிய திட்டம்
  • நிலுவையில் உள்ள பட்டா கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க புதிய சர்வேயர்கள் உருவாக்கம்
  • ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்
  • வரும் நிதி ஆண்டில் காவல்துறையில் புதிதாக 10,242 பேர் நியமிக்கப்பட உள்ளனர்
  • வரும் நிதி ஆண்டில் சீருடைப் பணியாளர்கள் சுமார் 10,276 பேர் நியமிக்கப்பட உள்ளனர்
  • ஊரக உள்ளாட்சிகளில் முதலமைச்சரின் கிராம தன்னிறைவு வளர்ச்சி திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டம் விரைவில் அறிமுகம்
  • எல்ஐசியுடன் இணைந்து புரட்சித் தலைவி அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம்
  • புதிதாக 45 உழவர் – உற்பத்தியாளர்கள் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்
  • ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்
  • மீதமுள்ள கிராமங்கள், குளங்கள், ஊருணிகள் போன்றவற்றை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் புனரமைப்பு செய்யப்படும்
  • காவேரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்பு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்
  • நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 53 ஏக்கரில் ரூ.77.94 கோடியில் மெகா உணவு பூங்கா அமைக்க ஒப்புதல்
  • முத்திரை தாள் வரி 1 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்படும்
  • கொரானா வைரஸ்: முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியுதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்
  • தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்களை நிறுவ திட்டம்
  • தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகை, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ரூ.70 கோடியில் உணவு பூங்காக்கள் நிறுவப்படும்
  • மீன்பிடி தடை காலத்தில் உதவித் தொகை வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு ரூ.298 கோடி நிதி ஒதுக்கீடு
  • 2000 இழுவலை மீன்பிடி படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றும் சிறப்பு திட்டம் ரூ.1600 கோடியில் செயல்படுத்தபடுகிறது
  • ரூ.235 கோடியில் விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரை குப்பத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்
  • சென்னை பொருளியல் பள்ளிக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எனும் அந்தஸ்து வழங்கப்படும்
  • கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 3 அடுக்கு முகமூடிகளை அரசு கொள்முதல் செய்து வைத்துள்ளது
  • சுற்றுலா ஊக்குவித்தல் திட்டத்திற்கு 295 சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தப்படும்
  • அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இதுவரை 1.88 லட்சம் பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன
  • பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்க தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது
  • சென்னையில் 8 இடங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது
  • கிருஷ்ணகிரி, திருச்சி, ஓசூர், காஞ்சிபுரம், நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது
  • சென்னை தியாகராய நகர் பகுதியில் 1.41 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன
  • சென்னை நகரின் பிற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாக பொருத்தப்படும்
  • அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிநியமனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு
  • நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களுக்கும் சிறப்பு ஆட்சேர்ப்பு பணிகள் நடத்தப்படும்
  • மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க ரூ.1,200 கோடி ஒதுக்கீடு
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4315 கோடி ஒதுக்கீடு
  • பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு
  • அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.100 கோடி
  • திறன்மிகு நகரங்கள் திட்டங்களை செயல்படுத்த ரூ.1650 கோடி ஒதுக்கீடு
  • அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1450 கோடி ஒதுக்கீடு
  • வரும் நிதி ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்
  • வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.4025 கோடி வழங்க 15-வது நிதிக்குழு பரிந்துரை
  • நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
  • புதிதாக அறிவிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் ரூ.550 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் அமைக்கப்படும்
  • குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு
  • அத்தியாவசிய உள்கட்டமைப்பு பணிகளை ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ள ஒருமுறை சிறப்பு திட்டம் விரைவில் அறிமுகம்
  • ஏழை எளிய மக்களுக்கான விரிவான விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு
  • ரூ.3,000 கோடி செலவில் சென்னையில் பேரிடர் தணிப்பு திட்டத்திற்கு பரிந்துரை
  • சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க ரூ.100 கோடி மானியம்
  • கல்லணை கால்வாய் திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.300 கோடி ஒதுக்கீடு
  • ரூ.25 கோடியில் சிட்லபாக்கம் ஏரி மறுசீரமைக்கப்படும்
  • கரும்பு விவசாயிகளிடம் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு
  • டன் ஒன்றுக்கு ரூ.100 என்கிற வீதத்தில் அரவை கால போக்குவரத்து மானியம் வழங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு
  • பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கான மாநில அரசின் பங்களிப்பு ரூ.724 கோடியாக உயர்வு
  • ரூ.1845 கோடி செலவில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர்ப் பாசன வசதி பெறும்
  • மீனவர்களுக்கான மீன் பிடித்தடைக்கால சிறப்பு நிதி உதவிக்கு ரூ.298 கோடி ஒதுக்கீடு
  • 4997 படகுகளில் ரூ.18 கோடி செலவில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும்
  • விழுப்புரம் அழகன் குப்பம் மற்றும் செங்கல்பட்டு ஆலம்பரைக்குப்பத்தில் ரூ.235 கோடி செலவில் மீன் பிடி துறைமுகங்கள்
  • நாகை ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித்துறைமுகம்
  • ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1364 நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்
  • ரூ.67 கோடி செலவில் காவேரி வடிநிலப்பகுதிகளில் 392 தூர்வாறும் பணிகள் நடைபெறும்
  • காவிரி பாசனப்பகுதியில் ரூ.1560 கோடி செலவில் பருவ கால மாற்றத் தழுவல் திட்டம்
  • மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்திற்கு பயன்படுத்தும் சாரபங்கா நீரேற்றுப் பாசன திட்டத்திற்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு
  • ரூ.610 கோடி செலவில் 37 அணைகள் புனரமைப்பு செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீடு
  • ரூ.2962 கோடி செலவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும்
  • 906 குளங்கள் மற்றும் 183 அணைக்கட்டு பகுதிகளை சீரமைக்க ரூ.583 கோடி ஒதுக்கீடு
  • அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு
  • ரூ.700 கோடியில் காவேரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்பு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்
  • புதிய குளங்களை உருவாக்குதல் மற்றும் பாசன வாய்க்கால்களை அமைக்க ரூ.655 கோடி ஒதுக்கீடு
  • உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையக்குதல் திட்டத்திற்கு ரூ.920 கோடி ஒதுக்கீடு
  • மாவட்டங்களில் உள்ள தலா 2 வட்டாரங்களில் ரூ.37 லட்சம் செலவில் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும்
  • படிப்புக்கு தேவையான பொருட்களை விலையின்றி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1018.39 கோடி ஒதுக்கீடு
  • உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையக்குதல் திட்டத்திற்கு ரூ.920 கோடி ஒதுக்கீடு
  • ஊரக பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, உருவாக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு
  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன
  • முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்
  • முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்கான நிதி ரூ.2.1 லட்சமாக உயர்த்தப்படும்
  • பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.3099 கோடியும், முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு
  • ஊரக சாலை மேம்பாடு திட்டத்திற்கு ரூ.1400 கோடி ஒதுக்கீடு
  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு
  • தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்க திட்டத்திற்கு ரூ.918 கோடி ஒதுக்கீடு
  • நகராட்சி நிர்வாகம் சார்பில் கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டப்படும்
  • ரூ.3831 கோடி செலவில் தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்
  • தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஈரோடு, வேலூர், ஓசூர் மாதிரி நகரங்களாக தேர்வு
  • நகராட்சி, மாநகராட்சிகளில் பாதாளச்சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற ரூ.406 கோடி ஒதுக்கீடு
  • சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
  • முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தை செயல்படுத்த ரூ.959 கோடி ஒதுக்கீடு
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.1033 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
  • புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டின் மாநில குடும்ப தரவு திட்டத்தை செயல்படுத்த ரூ.47.50 கோடி ஒதுக்கீடு
  • அரசு ஊழியர்களுக்கு சென்னை தாண்டர் நகரில் ரூ.76 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு
  • அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு ரூ.253.14 கோடி ஒதுக்கீடு
  • ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கான நிதியில் கல்வித் திட்டங்களுக்காக ரூ.2,018.24 கோடி ஒதுக்கீடு
  • அனைத்து பழங்குடியினர் குடியிருப்புகளிலும், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த ஒரு சிறப்புத் திட்டம்
  • சிறப்புத் திட்டத்தின் கீழ் ரூ.660 கோடியில் விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது
  • பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க ரூ.302.98 கோடி ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *