அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
டெல்லி, பிப்ரவரி-14
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.
டெல்லி ராமலீலா மைதானத்தில் 16-ம் தேதி காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடக்கிறது. பதவியேற்பு விழாவில், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சராக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில், அழைப்புக் கடிதம் பிரமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.