தாதா சாகிப் பால்கே விருது பெற்ற அமிதாப்

செப்டம்பர்-25

திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது அமிதாப் பச்சனுக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். ஏற்கனவே பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்ற அமிதாப் பச்சனுக்கு உயரிய விருதான தாதா சாகிப் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இரண்டு தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்து வரும் அமிதாப் பச்சன் தாதா சாகிப் விருதுக்கு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமிதாப் பச்சனுக்கு மத்திய அமைச்சர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு 1969-ம் ஆண்டிலிருந்து இந்த விருது கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2019-ம் ஆண்டிற்கான தாதா சாகிப் விருதை அமிதாப் பெற்றுள்ளார். தாதா சாகிப் விருதை பெற்ற அமிதாப் பச்சனுக்கு தலைவர்களும், திரைத்துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *