2020-21 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்: எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு

சென்னை, பிப்ரவரி-14

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபை கூடியதும் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020-2021-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 10-வது பட்ஜெட் இதுவாகும். 

எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

 • சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு
 • மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு
 • கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • உணவு மானியத்திற்கு ரூ.6500 கோடி ஒதுக்கீடு
 • தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு
 • போக்குவரத்து துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு
 • நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு
 • பேரிடம் மேலாண்மைக்கு ரூ.1360 கோடி ஒதுக்கீடு
 • தமிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு
 • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு
 • சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு
 • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.18,540 கோடி ஒதுக்கீடு
 • நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1403 கோடி ஒதுக்கீடு
 • வேளாண்துறைக்கு ரூ.11,894 கோடி ஒதுக்கீடு
 • நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடி ஒதுக்கீடு
 • ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஒதுக்கீடு
 • கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு
 • மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு ரூ.1230 கோடி ஒதுக்கீடு
 • நீர்ப்பாசனத்துறைக்கு 6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு
 • கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கப்படும்
 • சுற்றுலா மேம்பாடு திட்டத்திற்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு
 • மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி ஒதுக்கீடு
 • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு
 • ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு ரூ.4,109.53 கோடி ஒதுக்கீடு
 • பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் நலனுக்காக ரூ.1034.02 கோடி ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *