கீழடியில் அருங்காட்சியகம்: தமிழக அரசே அமைக்கும்-பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை, பிப்ரவரி-14

தமிழர்களின் வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறும் கீழடியில், புதிய அருங்காட்சியகத்தை தமிழக அரசே அமைக்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கிடைத்த அரிய பொருட்களை பாதுகாக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போது, கீழடியை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக பட்ஜெட்டில் கீழடியில் அருங்காட்சியகத்தை தமிழக அரசே அமைக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *