கோவையில் இருந்து டெல்லிக்கும், துபாய்க்கும் தினசரி நேரடி விமான சேவை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு

டெல்லி, பிப்ரவரி-13

கோவையில் இருந்து டெல்லிக்கு தினமும் நேரடி விமானங்களை இயக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறம் விமானப்போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்தார். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய அமைச்சரிடம் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

அந்த கோரிக்கை மனுவில்: கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு தினமும் நேரடி விமானங்களை இயக்க வேண்டும் என்றும், கோவையில் இருந்து துபாய்க்கு பன்னாட்டு நேரடி விமான சேவையும் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே தமிழக அரசு கையகப்படுத்திய நிலத்திலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *