கெஜ்ரிவால் பதவியேற்பு விழா: பேபி மப்ளர் மேனுக்கு மட்டும் அழைப்பு

டெல்லி, பிப்ரவரி-13

டெல்லி முதல்வராக 3-வது முறையாக பொறுப்பேற்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பேபி மப்ளர் மேனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. வருகிற 16-ம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் மூன்றாவது முறையாக முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க ஒன்றரை வயது குழந்தையை கெஜ்ரிவால் போன்று தலையில் மப்ளர் அணிந்து, மீசை வரைந்து சிறிய கண்ணாடி அணிவித்து அழைத்து வந்திருந்தனர்.

அவ்யன் தோமர் என்ற பெயர் கொண்ட அந்த குழந்தை சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆம்ஆத்மி தலைமை அலுவலகத்தில் நீண்ட நேரம் குழந்தையுடன் பெற்றோர் காத்திருந்தும் முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க முடியாமல் வீடு திரும்பினர்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட செய்தியில், “அரவிந்த் கேஜ்ரிவால் வரும் 16-ம் தேதி முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு பேபி மப்ளர் மேன் அழைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *