மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி?

டெல்லி, பிப்ரவரி-13

கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தன் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு பிறகு, புதிய தலைவரை நியமிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ராகுல் காந்தியை சம்மதிக்க வைத்து மீண்டும் தலைவராக்கும் முயற்சிகளும் நடந்து வந்தன. ஆனால், ராகுல் காந்தி தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்ததால், காங்கிரசின் அகில இந்திய இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், புதிய தலைவரை உடனடியாக தேர்வு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாநாடு அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

ராகுல்காந்தியே மீண்டும் தலைமை பொறுப்புக்கு வரவேண்டும் என அசோக் கெலாட் போன்ற மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், கட்சி தலைவராக திரும்புவதற்கு ராகுல் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *