ரூ.6,374.69 கோடியை விடுவிக்க கோரி நிர்மலா சீதாராமனிடம் உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி வலியுறுத்தல்

டெல்லி, பிப்ரவரி-13

14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படவேண்டிய ரூ.6,374.69 கோடியை விடுவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி ரூ.2029.22 கோடி செயலாக்க மானியத் தொகையையும் மற்றும் ரூ.4345.47 கோடி அடிப்படை மானியத்தொகையையும் விடுவிக்கும்படி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது ஊரகவளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இதேபோன்று, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரையும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை விடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *