நிர்பயா வழக்கு- குற்றவாளி வினய் சர்மாவின் மனு தள்ளுபடி

டெல்லி, பிப்ரவரி-13

நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1-ம் தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. 

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் சர்மா, தனது வழக்கறிஞர் மூலம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்கும் போது, சமூக விசாரணை அறிக்கை, மருத்துவ நிலை அறிக்கை மற்றும் குற்றச்செயலில் மனுதாரர் வினய் சர்மாவின் பங்கு ஆகியவை கவனத்தில் கொள்ளப்படவில்லை என மனுதாரரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதிட்டார்.  

இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.  இதனால், வினய் சர்மாவின் மரண தண்டனை மீண்டும் உறுதியாகி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *