டெல்லி தேர்தல் வெற்றி எதிரொலி: 24 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் ஆம் ஆத்மியில் இணைந்தனர்
டெல்லி, பிப்ரவரி-13
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்து ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது.
62 இடங்களில் வெற்றி பெற்று டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வரும் 16ம் தேதியன்று முதல்வராக பதவியேற்க உள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி எதிரொலியாக ஆம் ஆத்மி கட்சியில் சேர மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக ஆம் ஆத்மி கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் கட்சியில் இனைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.