சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மம்தா பானர்ஜி மீண்டும் பேரணி

கொல்கத்தா, பிப்ரவரி-12

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மீண்டும் பேரணி நடத்தினார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

குடியுரிமைச் சட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கடுமையாக எதிர்த்து வருகிறார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் துர்காபூரில் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது:

‘‘குடியுரிமைச் சட்டம், குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதனை மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.’’ எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *