மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
இஸ்லமாபாத், பிப்ரவரி-12
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீது. இந்த தாக்குதலுக்கு பிறகு சயீதுவின் அமைப்புகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது.
பாகிஸ்தானில் மட்டும் 23 தீவிரவாத வழக்குகளை ஹபீஸ் சயீது எதிர்கொண்டு வருகிறார். மும்பை தாக்குதல் வழக்கில் ஹபீஸை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சர்வதேச நெருக்கடி காரணமாக சயீது மீது பாகிஸ்தான் அரசு வழக்குப்பதிவு செய்தது. தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தது, பண மோசடி உள்ளிட்ட புகார்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் அடிப்படயில் ஹபீசுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.