மதமாற்றமா? ”போயி வேற வேலை இருந்தா பாருங்கடா”-நடிகர் விஜய்சேதுபதி காட்டம்

சென்னை, பிப்ரவரி-12

சமீபத்தில் நடிகர் விஜய் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரித்துறையினரின் சோதனை குறித்து சமூகவலைதளங்களில் பரவும் வதந்தி தொடர்பாக நடிகர் விஜய்சேதுபதி ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்திய சோதனையில், அன்புசெழியனுக்கு தொடர்புள்ள இடங்களிலிருந்து ரூ.77 கோடி ரொக்கம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும் நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதையடுத்து கிறிஸ்தவக்குழுக்கள் நடிகர் விஜய் மூலமாக தமிழகத்தில் காலூன்ற நினைப்பதாகவும், இதில் நடிகர் விஜய் சேதுபதி, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

இந்தச் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விஜய் சேதுபதி, ‘போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ என்று ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *