இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்படும்-ட்ரம்ப்

வாஷிங்டன், பிப்ரவரி-12

இந்திய சுற்றுப்பயணத்தில் இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்படலாம் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற 24-ந் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார்.  டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார்.  வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லியுடன் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கும் செல்கிறார். பிரதமர் மோடியுடன் இணைந்து பொதுக்கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் ட்ரம்ப் உரையாற்றுகிறார்.

இந்திய பயணம் பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில், அதிபர் டிரம்ப் தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.  அவர் கூறும்பொழுது, அவர் (பிரதமர் மோடி) மிக நல்ல மனிதர்.  இந்தியாவுக்கு செல்லும் நாளை நான் எதிர்நோக்கியுள்ளேன்.  இந்த மாதஇறுதியில் நாங்கள் அங்கு செல்ல இருக்கிறோம் என கூறினார். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படலாம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *