பிகில் பட வசூல் விவகாரம்: நடிகர் விஜய்யின் ஆடிட்டர் ஆஜராகி விளக்கம்

சென்னை, பிப்ரவரி-12

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பான விசாரணைக்கு நடிகா் விஜய், பைனான்சியா் அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டா்கள் வருமானவரித் துறை அலுவலகத்தில் ஆஜராகினா்.

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் அட்லி இயக்கத்தில், நடிகா் விஜய் நடிப்பில் தீபாவளியின்போது வெளியான ‘பிகில்’ திரைப்படம் மூலம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்பட குழு மறைத்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரி துறையினா் கடந்த வாரம் திடீா் சோதனை நடத்தினர்.

இதில், அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி கணக்கில் வராத பணமும், ரூ.300 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமானவரி துறை அறிவித்தது.

இதையடுத்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் அடிப்படையிலும், வரி ஏய்ப்பு தொடா்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் விசாரணை செய்வதற்கு வருமானவரித் துறையினா் நடிகா் விஜய்க்கும், அன்புச்செழியனுக்கும் சம்மன் அனுப்பினா்.

இந்நிலையில் நடிகா் விஜய், அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டா்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளனர். அவா்களிடம் வருமானவரித் துறை அதிகாரிகள், தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனா்.

சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் ஆகியவற்றுக்கு அவா்கள் இருவரும் விளக்கம் அளித்தனா். இந்த விசாரணை சில மணி நேரம் நீடித்தது. இது தொடா்பாக அடுத்தகட்ட விசாரணையும் மேற்கொள்ளப்படும் என வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *