நில அதிர்வில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு?

பாகிஸ்தானில் லாகூருக்கு வடமேற்கே திடீரென்று ஏற்பட்ட நில அதிர்வில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

லாகூர், செப்டம்பர்-24

பாகிஸ்தானின் லாகூருக்கு வடமேற்கே 173 கி.மீ. தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1. ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அனைத்தும் குலுங்கி, சாலைகளும் சேதமடைந்தன.

இதனால் பீதியடைந்த பொதுமக்கள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வில் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கலாம் என்றும் பாகிஸ்தான் ஊடக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். நில அதிர்வு காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *