தங்கம் விலை பவுன் ரூ 30 ஆயிரத்தை தாண்டும்

சென்னை ஆக 24

சென்னையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 30 ஆயிரத்தை தாண்டும் என நகை வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சென்னையில் இன்று ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ச ரூ.640 உயர்ந்து ரூ. 29,440- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.3,680-க்கு விற்பனையாகிறது. இதையடுத்து, ஆபரண தங்கத்தில் விலை பவுன் ரூ.30,000- த்தை நெருங்குகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 49,200 ஆக உள்ளது. ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.49,20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.28,800- ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.3000 உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பவுன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயை தாண்டியது. ஜூலை மாதம் பவுனுக்கு 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் 27 ஆயிரத்தைக் தாண்டியது. இதையடுத்து அடுத்த 4 நாட்களில் 28 ஆயிரத்தையும் தாண்டியது. ஆகஸ்ட் 14ம் தேதி 29 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை தற்போது 30,000 ரூபாயை தாண்டும் என தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *