காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!!!

சென்னை, பிப்ரவரி-11

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக படத்தின் முதல் லுக், இரண்டாவது லுக், மூன்றாவது லுக் என்று முன்று போஸ்டர்களை பட நிறுவனம் வெளியிட்டிருந்தது.

அந்த போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் கடந்த சில தினங்களாக நெய்வேலி நிலகரி சுரங்கத்தில் எடுக்கப்பட்டன.

இந்தநிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ’ஒரு குட்டி கதை சொல்லட்டுமா?’ எனும் பாடல் காதலர் தினத்தன்று மாலை ஐந்து மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *