ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்…பிறகு கூட்டணி பற்றி பேசலாம்-ராமதாஸ்

சென்னை, பிப்ரவரி-11

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி பற்றி யோசிக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸிடம் தமிழருவி மணியன் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த டாக்டர் ராமதாஸ், ரஜினியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறியிருக்கும் தமிழருவி மணியனின் பேட்டிக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என்பதால் தான் அதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ரஜினி முதலில் கட்சி துவங்கட்டும். துவங்கிய பின் கூட்டணி பற்றி யோசிக்கலாம்.

செம்மரம் போல் பனை மரம் வெட்டுவதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார். பாஜக நெய்வேலியில் போராட்டம் நடத்தியது குறித்து ராமதாஸ் கூறுகையில், அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு தற்போது போராட்டக்களமாக மாறிவருகின்றது. எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்று இருக்கக்கூடாது. மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்கும் போராட்டம் தேவை.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *