டெல்லியில் மீண்டும் ஆட்சியமைக்கிறார் கெஜ்ரிவால்: மம்தா, ஸ்டாலின் வாழ்த்து

டெல்லி, பிப்ரவரி-11

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி மெஜாரிட்டி இடங்களை விட அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. 3-வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் 70 உறுப்பினர் கொண்ட சட்டசபைக்கு கடந்த 8-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 57 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், 3-வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மீண்டும் ஆட்சியமைக்கவிருக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் எனது வாழ்த்துகள். மதவாத அரசியலை வீழ்த்தி மக்கள் வளர்ச்சி பணிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேசத்தின் நலன் கருதி கூட்டாட்சி உரிமைகள், மாநில நலன்கள் வலிமைப்படுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, மம்தா பானர்ஜி கூறுகையில், முதலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் பா.ஜ.க.வை நிராகரித்துவிட்டனர். வளர்ச்சி பணிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மதவாத பிரிவினையை மக்கள் முறியடித்துவிட்டன என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *